yoga day

சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டேராடூனில் இன்று பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாடு முழுவதிலுமிருந்தும் சுமார் 55 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், நான்காவது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய தலைவர்கள் உட்பட 55 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.                                                                                                                                 21modi-yoga1

இதனை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றதே இதுவரை உலக சாதனையாக உள்ளது. இதனை டேராடூன் நிகழ்ச்சி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.