முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..!

640

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று 93வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், நேசத்திற்குரிய வாஜ்பாய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
வாஜ்பாய் அவர்களின் தனித்துவம் மற்றும் தொலை நோக்கு பார்வையுடன் கூடிய தலைமை உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச்செய்தாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.