இயேசு கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளை நினைவு கூறுவோம் என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

520

இயேசு கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளை நினைவு கூறுவோம் என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளும், வாழ்க்கையும் ஊக்க சக்தியாக விளங்குவதாக கூறியுள்ளார்.
இயேசு கிறிஸ்து போதித்த அமைதி, ஒருமைப்பாடு மற்றும் நற்கருணைகளை அனைவரும் போற்றவேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த இனிமையான திருநாளில் அவரது வாழ்க்கையையும், போதனைகளையும் நாம் நினைவில்வைத்து கொண்டாடி மகிழ்வோம் என்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.