பிரதமரின் இணையதளத்தை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய மொபைல் ஆப் வசதி. டெல்லியில் மோடி நாளை துவக்கி வைத்து, பொதுமக்களுடன் உரையாற்றுகிறார்.

376

பிரதமரின் இணையதளத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் புதிய மொபைல் ஆப்-பின் முன்முயற்சிகளை டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடக்கி வைக்கிறார்.
அரசின் குடி மக்களுக்கான, பிரதமரின் இணையதளமான MYGOV என்ற ஆப் துவங்கப்பட்டு, இரண்டாம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, நாளை டெல்லியில் இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார்.
இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில், பல விவாதங்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் பிரதமரின் இணையதளத்தின் புதிய முன்முயற்சிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்துவார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் ஏற்கனவே மைகவ் இணையதளத்தை பயன்படுத்தியவர்கள், மற்றும் அவர்களின் யோசனைகளையும் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் ஏற்கனவே மைகவ் இணையதளத்தில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சுமார், 35லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள், மைகவ் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.