ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு | டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து …!

384

ஜப்பான் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள 465 தொகுதிகளுக்கான தேர்தலில் சுதந்திர ஜனநாயக கூட்டணி 312 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதனையடுத்து ஷின்சோ அபே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் தனது அன்பான நண்பர் ஷின்சோ அபேக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இருநாட்டு உறவுகள் வலுப்பெற எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.