மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி ஆலோசனை..!

744

மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடி உள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இருநாட்டு தலைவர்களும் மாலத்தீவு அரசியல் நெருக்கடி, வடகொரிய அணு ஆயுத விவகாரம், இந்திய பசிபிக் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என சீனா எச்சரித்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.