காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

427

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கடிதத்தில் முதலமைச்சர் விளக்கி உள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், நீதிமன்றம் 6 வாரம் கெடு விதித்த நிலையில் 4 வாரங்கள் முடிந்து விட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,மத்திய அரசு மவுனம் காப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.