பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி திட்டம் ..!

253

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு உள்ளதாக மும்பை உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில போலீசார் மாவோயிஸ்டுகள் 5 பேரை கைது செய்தனர் . அவர்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் ரோனா ஜேக்கப் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ராஜீவ் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று தாக்குதல் நடத்த இருப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் மத்திய உளவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் சதி குறித்த தகவல் வெளியாகி இருப்பதை தொடர்ந்து, பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.