நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் : பிரதமர் மோடி

320

நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நேரடி மானிய திட்டம் மூலம் சமையல் எரிவாயு மானியத்தை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால் 57 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜி.எஸ்.டி. மூலம் நாடு முழுவதும் புதிய வணிக கலாச்சாரம் உருவாகியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த சட்டம் குறித்த நுகர்வோர் தெளிவாக இருப்பதால் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜி.எஸ்.டி. மூலம் ஏராளமான மறைமுகை வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பயன் அடைந்து வருவதாக கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.