2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படும் – பிரதமர் மோடி உறுதி ..!

383

2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவில் காசநோய் இன்னும் முற்றிலுமாக ஒழியவில்லை என்று வேதனையுடன் கூறினார். 15 ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க முடியவில்லை என்றால் அணுகுமுறையை மாற்றுவது குறித்து ஆராயவேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். அதேநேரம், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்பதே
மத்திய அரசின் இலக்கு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.