உலகிற்கு அகிம்சியை போதித்த நாடு இந்தியா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் ..!

1183

உலகிற்கு அகிம்சியை போதித்த நாடு இந்தியா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்த பின், உரையாற்றிய பிரதமர் மோடி காலை வணக்கம் என்று தெரிவித்தார். வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் ராணுவ கண்காட்சி நடைபெற்று வருவதாக கூறினார். சென்னையில் நடைபெறுவது 10 வது ராணுவ கண்காட்சி என்றும், 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள், 155 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். சோழர்களின் பெருமை பெற்ற நிலம் தமிழ்நாடு எனவும் மோடி கூறினார். இந்த மண்ணில் இருந்துதான் சகோதரத்துவம், அமைதி எல்லாம் கற்றுத்தரப்படுவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார். சிறு,குறு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட வேணடும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.