ரூ.300 கோடி செலவில் ஒன்றரை ஆண்டில் கட்டப்பட உள்ளது – பிரதமர் மோடி

190

நாட்டு மக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சென்ற பிரதமர் மோடி, 3வது முறையாக நேரில் சென்று வாஜ்பாய் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், முதியோருக்கான தேசிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவ மையம் 300 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை ஆண்டுகளில் கட்டப்பட உள்ளது.

எய்ம்ஸ் பிரதான கட்டிடத்தையும், தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதி ஒன்றையும் இணைக்கும் சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சாத்தியமான அளவுக்கு குறைந்த செலவிலான, சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம் என்றார். கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்பட்டதைவிட கூடுதலாக, மத்திய பாஜக அரசு, புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, அனுமதி வழங்கியிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.