பிரதமர் மோடி ஜனாதிபதி சந்திப்பு டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியீடு !

197

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து பேசியதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றையதினம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக 2 முக்கிய மசோதாக்கள் மற்றும் 4 துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்ததாக டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.