பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் – நடிகர் பிரகாஷ் ராஜ்..!

326

பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவில் இஸ்லாமியர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக வேதனை தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக தாம் கருத்துக்களை கூறுவதை பா.ஜ.கவினரால் சகித்து கொள்ள முடியவில்லை என்று பிரகாஷ்ராஜ் கூறினார். இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் இருவரும் உண்மையான இந்துக்களாக ஒருபோதும் இருக்க முடியாது என்று தெரிவித்த அவர், இந்து மதம் குறித்து பேசுவதற்கு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எந்த தகுதியும் இல்லை என்றும் சாடினார். பிரதமர் மோடிக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்