பிரதமர் மோடி வேறு எங்கும் பிஸியாக இருக்கிறாரா?-நடிகர் பிரகாஷ் ராஜ்!

610

பிரதமர் மோடி பிஸியாக இருப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவில்லையா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடிவருகிறார். அண்மையில், பிரதமர் மோடியை சிறந்த நடிகர் என பிரகாஷ் ராஜ் விமர்சித்ததற்கு பாஜக வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ட்விட்டரில் புதிய பதிவு ஒன்றை பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில், குளிர்காலம் தொடங்காததால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தவில்லையா? அல்லது, பிரதமர் மோடி ‘பிஸி’யாக இருப்பதால் நடத்த முடியவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து குஜராத் தேர்தலுக்கு முன் கேள்வி எழுப்பினால் பதில் சொல்வது வெட்கமாக இருக்குமா? என்று குறிப்பிட்டுள்ள அவர், குளிர்காலக்கூட்டத்தொடர் அடுத்த ஆண்டுதான் நடத்தப்படுமா? என்று சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.ice_screenshot_20171126-113208