பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புயல் நிவாரண நிதி கேட்க முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார்.

201

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புயல் நிவாரண நிதி கேட்க முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார்.
சென்னை தலைமை செயலத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் டெல்லி பயணம் தொடர்பாகவும், பிரதமரிடம் அளிக்கவுள்ள கோரிக்கை மனுவில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று இரவு 7 மணியளவில் தனி விமானத்தில் முக்கிய உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி செல்கிறார். டெல்லியில் நாளை மாலை 4 மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது விரிவான மனு ஒன்றையும் அவர் பிரதமரிடம் அளிக்கிறார். மனுவில், புயல் நிவாரண உதவிகளை கோரும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலை வைக்கவும் பிரதமரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்துவார் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்தபின், நாளை மாலையே முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.