வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்

194

எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை என குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை நம்பாத காங்கிரஸ் கட்சி தான் நாட்டை ஆள வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை காலை 11.30 மணியளவில் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். இதனால் வாரணாசியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதலில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மோடி, அந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பிற்பகல் 3 மணிக்கு பேரணி செல்கிறார்.

இதன் ஒருபகுதியாக இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், பிரதமர் மோடி பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை நம்பாத காங்கிரஸ் கட்சி தான் நாட்டை ஆள வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.