வெங்கையா நாயுடுவை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி..!

193

டெல்லியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள், அரசியல்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். டெல்லியில் உள்ள துணை குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், நேபாள முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.