சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி உடல் குறித்து விசாரித்தார்…!

446

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி உடல் குறித்து விசாரித்தார்.
ஒரு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தினத்தந்தி பவளவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், துரைமுருகன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் ஐந்து நிமிடங்கள் இருந்த பிறகு பிரதமர் மோடி அங்கியிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்ததராஜன், விரைவில் முழு உடல் நலம் பெற்று வழக்கமான பணியை கருணாநிதி தொடங்க வேண்டும் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தாக கூறினார்.