பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடி நாட்டு மக்களிடம் உரை..!

409

பிரதமர் மோடி, 46-வது மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடுகிறார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியின் வாயிலாக, நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். அதன்படி, தனது 46-வது மான் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகிறது. பிரதமர் மோடி உரையை இன்று காலை பதினோரு மணி முதல் ஆல் இண்டியா ரேடியோ நேரடியாக ஒலிபரப்பு செய்யும்.

கடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை குறிப்பிட்டு, வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று கூறிய பிரதமர் மோடி, அமைதி, உண்மை வழியிலான போராட்டமே இறுதியில் வெல்லும் என்று தெரிவித்தார். இந்த மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியில், மத்திய அரசின் பல்வேறு சாதனைத் திட்டங்கள், நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றி வருவது குறி்ப்பிடத்தக்கது.