நான்கு ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தில் 19 நாட்கள் மட்டுமே பங்கேற்றது தெரிய வந்துள்ளது.

மத்தியில் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் கடந்த 4 ஆண்டுகளில் பலமுறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. கூட்டத் தொடரில் 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி கலந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. வந்த நாட்களிலும் பெரும்பாலான நேரம் அவையில் அவர் உரை நிகழ்த்தவில்லை. 6 முறை மட்டுமே சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, இரண்டு முறை நேரு குறித்து பேசியுள்ளார். 4 முறை மட்டுமே விவாதங்களில் அவர் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அவர் வெளிநாடுகளில் இருந்துள்ளார். இந்திய பிரதமர்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் குறைவான நாட்கள் பங்கேற்றவர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.