நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் திராணி மோடி அரசுக்கு இல்லை – சந்திரபாபு நாயுடு சாடல்..!

641

நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் திராணி மோடி அரசுக்கு இல்லை என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத அதிருப்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் வெளியேறியது. இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அக்கட்சி நம்பிக்கையில்லா கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆந்திர நலனில் மத்திய அரசுக்கு சிறிதளவு கூட அக்கறையில்லை என்று சாடிய சந்திரபாபு நாயுடு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் கூறினார். நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.