பிரதமர் மோடி நேபாளம் பயணம்..!

195

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றுள்ளார்.

கடந்த ஜூலை மாத இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த பிரதமர் மோடி, ஒரு மாதமாக இந்தியாவில் தங்கி அரசு மற்றும் கட்சிப்பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில், இன்று அண்டை நாடான நேபாளத்திற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றுள்ளார். தலைநகர் காத்மண்டுவில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு தலைவர்கள் வரவேற்றனர். காத்மண்டுவில், இரு நாட்கள் தங்கும் அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நட்புணர்வை வலுப்படுத்தும் வகையில் 4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அப்போது நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம், பூடான், மியான்மர் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.