மே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது !

193

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை மே 19 ம் தேதி வரை திரையிடக்கூடாது என தேர்தல் ஆணையம் கறாராக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள பி.எம். நரேந்திரமோடி படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் வெளியிடுவதற்காக இந்த படம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

இந்நிலையில் மோடியின் படத்துக்கு தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதின. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், மே 19 வரை மோடியின் திரைப்படம் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடைபெற மோடியின் படம் தாமதமாக திரைக்கு வருவதே சிறந்தது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.