கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசுக்கு அக்கறையில்லை – பிரதமர் மோடி.

1010

பா.ஜ.க ஆட்சியில் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை ஒன்றரை மடங்கு அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நமோ செயலி மூலம் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசின் அக்கறையின்மையால் ஃபாசல் பீமா யோஜ்னா திட்டத்தின் முழு பயனையும் கர்நாடகா விவசாயிகள் பெற முடியவில்லை என்று கூறினார். விவசாயிகளின் வளர்ச்சிக்காக உழைக்கும் அரசு தான் கர்நாடகாவுக்கு தேவை என்று கூறிய அவர், பா.ஜ.க ஆட்சியில் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை ஒன்றரை மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.