காங்கிரஸ் கட்சி தன்னை பயமுறுத்தினாலும் ஊழலக்கு எதிரான போர் தொடரும் : பிரதமர் நரேந்திர மோடி திட்டம் ..!

350

கொடும்பாவிகளை எரித்து காங்கிரஸ் கட்சி தன்னை பயமுறுத்தினாலும் ஊழலக்கு எதிரான போர் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி, குல்லு மற்றும் பலம்ப்பூர் பகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், உயர் மதிப்பு நோட்டுகள் கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதன் விளைவாக, சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களில் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்டு இருந்தால், நாட்டில் பெருமளவு ஊழல் அப்போதே ஒழிந்திருக்கும் என்று மோடி சுட்டிக்காட்டினார். காங்கிரசும், ஊழலும், மரமும் வேரும் போல, ஒன்றை ஒன்று பிரிக்கவே முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.