புதிதாக பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு. மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை.

324

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை பிரதமர் மோடி இன்று சந்தித்து உரையாடுகிறார்.
2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பயிற்சிக்குப் பின்பு அதிகாரிகளாக நேற்று பொறுப்பேற்றனர். மொத்தம் 172 அதிகாரிகள் மத்திய அரசின் 48 துறைகளில் துணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அமைச்சகங்கள், துறைகளின் முக்கியத் திட்டங்கள், கொள்கைகள் தொடர்பான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 172 பேரையும் சந்தித்து இன்று கலந்துரையாடுகிறார்ட. மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டம், மின்னணு நிர்வாக மேம்பாடு, விண்வெளித் தொழில்நுட்பம் போன்றவை குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.