புதிய இந்தியாவின் இளைஞர்கள் நாட்டை மாற்றுவார்கள்-பிரதமர் மோடி!

1280
Prime Minister, Narendra Modi with Union Home Minister Rajnath Singh at the inauguration of the birth centenary of Rani Gaidinliu, in New Delhi on Monda

புதிய இந்தியாவின் இளைஞர்கள் நாட்டை மாற்றுவார்கள் என பிரதமர் மோடி 2017 ஆம் ஆண்டின் கடைசி மான் கி பாத் நிகழ்ச்சியில் நம்பிக்கை தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டின் கடைசி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தால் நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிவதாக கூறினார். பெண்கள் ஆண் துணையுடன் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு விட்டதாகவும், இதனால் ஆண்களின் துணையின்றி பெண்கள் ஹஜ் யாத்திரை செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார். 2018-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பத்து நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவின் இளைஞர்கள் நமது நாட்டை மாற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மாவட்டந்தோறும் மாதிரி நாடாளுமன்றங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகளை பெரிய அளவில் எடுத்துச் செல்ல இருப்பதாக அவர் தெரிவித்தார்.