தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை…!

309

தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சற்று நேரத்தில் சென்னை வருகை..
தினத்தந்தி நாளிதழின் 75வது ஆண்டு பவளவிழா நிகழ்ச்சிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தினத்தந்தி பவளவிழா மலரை வெளியீட்டு உரையாற்றுகிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். சென்னை விமானநிலையம் முதல் விழா நடைபெறும் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது உடல்நலம் குறித்து கருணாநிதியிடம் பிரதமர் மோடி கேட்க உள்ளார்.