பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி : மோடியின் 2 லட்சம் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன

240

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 2 லட்சம் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு கண்காட்சி ஜெய்பூரில் நடைபெற்றது.

ஜெய்ப்பூரை சேர்ந்த மன்மோகன் அகர்வால் என்பவர் பிரதமர் மோடியின் தீவிர தொண்டனாக திகழ்கிறார். இவர், பிரதமர் மோடியின் புகைப்படங்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையலில் மோடியின் பிறந்தநாளான நேற்று அவரின் 2 லட்சம் புகைப்படங்கள் கொண்டு சிறப்பு கண்காட்சியை மன்மோகன் அகர்வால் நடத்தினார். இது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் பிரதமர் மோடியின் அரிய வகை புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தது.