மோடியின் ஆட்சியில் அந்நிய முதலீடு 53 சதவீதம் அதிகரிப்பு. நிதியமைச்சர் அருண்ஜெட்லி பெருமிதம்!

246

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் அந்நிய முதலீடு 53 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அந்நிய முதலீடு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதிலளித்து பேசினார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடையச் செய்வதற்கும், விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் நாட்டின் அன்னிய முதலீடு நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, ஆனால் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் தற்போது நிலவுவதாக தெரிவித்தார். இதன் விளைவாக நாட்டின் அந்நிய முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 53 சதவீதம் அதிகரித்துள்ளளதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். கடந்த காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும் போது இது ஒரு அளப்பரிய சாதனை என்றும் அருண்ஜெட்லி பெருமிதத்துடன் கூறினார்.