ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..!

140

ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினத்தந்தி நாளிதழின் 75வது ஆண்டு பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமானநிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் மெரீனா கடற்கரை அருகேயுள்ள கடற்படை தளத்துக்கு வந்த அவர், அங்கியிருந்து கார் மூலம் விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கிற்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.