சாதாரண மக்களும் வங்கி கணக்கு தொடங்க பிரதமர் மோடிதான் காரணம் !

211

சாதாரண மக்களும் வங்கி கணக்கை தொடங்கக்கூடிய வாய்ப்பை தந்தவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழா பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நமது நாட்டை பெருமைக்குரிய வகையில் மாற்றிய பெருமை பிரதமர் மோடியை சேரும் என்று கூறினார். மேலும் சாதாரண மக்களும் வங்கி கணக்கை தொடங்கக்கூடிய வாய்ப்பை பிரதமர் மோடி உருவாக்கி தந்துள்ளதாகவும், இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 22 கோடி வங்கி கணக்கினை துவக்கி தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் காவிரி உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கு தி.மு.கவும், அ.தி.மு.கவும் தான் காரணம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.