தீவிரவாதிகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.

348

தீவிரவாதிகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.

நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஆண்டுதோறும் டெல்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது பிரதமரின் வழக்கமாக உள்ளது. ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று தான் உரையாற்றி வருகிறார். ஆனால், காஷ்மீர் கலவரம், பதான்கோட் தீவிரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தாண்டு குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் நின்று உரையாற்ற அறிவுறுத்துமாறு பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலிடம் உளவுத்துறை தெரிவித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையால் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.