பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

517

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தலைமை செயலத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.