2 நாட்கள் நடைபெறும் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..!

285

டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.

நிதி ஆயோக் அமைப்பு சார்பில் நடைபெறும் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டில், போக்குவரத்து மறுஉருவாக்கம், மாற்று எரிபொருள் ஆகியவை குறி்த்து கலந்தாலோசிக்கப்படும். டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இன்று துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மாநாட்டில், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஹீரோ சைக்கிள்ஸ், டாடா மோட்டார்ஸ், ஓலா, மாருதி சுஸுகி, ஹோண்டா, டோயோடா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள அரசுகளின் தலைவர்கள், தொழில்துறை, ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆலோசனைக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 2,200 பேர் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து, ஒரு தேசம் – ஒரு அட்டை என்ற திட்டம் 3 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம், அனைத்துவிதமான பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்கும் வசதி அமல்படுத்தப்படும் என நிதி ஆயோக் தகவல்கள் தெரிவிக்கின்றன.