கேரளா வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக நிதியுதவி – பிரதமர் மோடி….

252

கேரளா வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் உடனடியாக 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.மேலும் மழை சார்ந்த இடர்பாடுகளில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த 100 கோடி நிதி மற்றும் பிரதமர் மோடி அறிவித்த 500 கோடி நிதியுதவி என மொத்தம் 600 கோடி ரூபாயை விடுவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக கேரள ஆளுநர் சதாசிவத்திடம் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது கேரளாவுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.