பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவில் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

210

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவில் தண்டனை அளிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தடய அறிவியல் துறையில் உள்ள டிஎன்ஏ தொழில்நுட்ப பயன்பாடு விதிமுறைகள் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றார். குற்ற வழக்குகளில் தீர்ப்புகளை வழங்குவதில் தடய அறிவியல் துறை முக்கியப் பங்கு வகித்து வருவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குற்ற வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைப்பதில் தடய அறிவியல் துறை, காவல் துறை, நீதித்துறை ஆகியவை மூன்று முக்கியத் தூண்களாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.