மருத்துவ உபகரணம் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

288

இந்திய மருத்துவத்துறை உலகத் தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜுனாகத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். மருத்துவத்துறைக்கு சிறந்த மருத்துவர்களும், திறன் வாய்ந்த மருத்துவ ஊழியர்களும் தேவைப்படுவதாக அவர் கூறினார். சிறப்பான மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் படவேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி,சுகாதாரத்துறையில் உலகத் தரத்துக்கு ஈடான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தூய்மை தொடர்பான மத்திய அரசின் முயற்சிகள் உலக அளவில் பாராட்டை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மக்கள் நோய்களால் பாதிக்கப் படாமல் இருப்பதை தூய்மை உறுதி செய்வதால் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.