வாஜ்பாய்க்கு எதிரிகளே இல்லை – பிரதமர் மோடி

147

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவை அடுத்து, இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது என்று பிரதமர் மோடி தனது இரங்கல் உரையில் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமாக பேசிய பிரதமர் மோடி, தனக்கு நிர்வாக திறனை கற்றுத் தந்தவர் வாஜ்பாய் என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு பேரிழப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார். வாஜ்பாய் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று கூறிய அவர், இந்தியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக பணியாற்றிய வாஜ்பாய்க்கு எதிரிகளே இல்லை என்று கூறிய பிரதமர் மோடி, வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும் என்றும் தெரிவித்தார். பாஜகவின் கொள்கைகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரப்பியவர் வாஜ்பாய் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இந்த தேசத்திற்காக அர்பணித்தவர் வாஜ்பாய் என்று கூறியுள்ளார்.