கேரளாவுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

154

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.