கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் – பிரதமர் மோடி…..

160

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், கேரளா வெள்ளம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவரிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் செய்யப்படும் என்றார். இந்த பேரிடர் காலத்தில் கேரள மக்களோடு தோளோடு தோளாக தாங்கள் நிற்போம் என அவர் கூறியுள்ளார்.