ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்..!

414

பிரதமர் மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்படுகிறார்.

டெல்லியில் இருந்து இன்று தனிவிமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, தனது முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு செல்கிறார். ருவாண்டாவில், கிகாலி என்ற இடத்தில் 1994-ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிடுவார் என வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து நாளை உகாண்டா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பின்னர், 25ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது ஆப்பிரிக்க பயணத்தின்போது, 3 நாடுகளின் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அந்நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவார் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.