நமோ மொபைல் ஆப் மூலம் விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடல்..!

190

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்குவதை அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நமோ மொபைல் ஆப் மூலம் விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருவதாகவும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 600 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் மீது மத்திய அரசு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்குவதை அரசு உறுதி செய்யும் என்றும் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.