பிரதமர் மோடி 5 நாளாக இந்தோனேஷியா சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம்..!

270

இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று 5 நாள் பயணமாக செல்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேஷியா செல்கிறார். தலைநகர் ஜகார்த்தாவுக்கு செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தோனேஷியாவில் 3 நாட்கள் தங்கும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு பிரதமர் மோடி ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார். அங்கு ஆஸ்திரேலியா, புருனே உள்ளிட்ட ஆசியா -பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 22 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷான்கிரி- லா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.