தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது : பிரதமர் நரேந்திர மோடி

143

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என இலங்கை பிரதமரிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஐந்து நாள், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் விவகாரம் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, கைது செய்யப்பட்ட மீனவர்களை எந்த சூழ்நிலையிலும் தாக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுனார். இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திரிகோணமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தையின் போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.