பிரதமராக வரவேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை – மோடி

128

சன்னியாசி ஆகவேண்டும் என்று நினைத்தானே தவிர, பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடியை சந்தித்து நடிகர் அக்சய் குமார் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், தூங்குவதற்கு சற்று அதிகமான நேரத்தை நாள்தோறும் ஒதுக்க வேண்டும் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னிடம் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார். பிரதமர் ஆகும் வரை தனக்கு வங்கி கணக்கு எதுவும் கிடையாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். கோபப்படும் அளவுக்கு எந்த சூழலையும் தான் உருவாக்கி கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

சன்னியாசி ஆகவேண்டும் என்று நினைத்தானே தவிர, பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை என்றும் மோடி குறிப்பிட்டார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என தான் விரும்பியதாகவும் பிரதமர் தெரிவித்தார். அரசியல் தவிர்த்து, மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எண்ணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசினார்.