வருமானவரித்துறை சோதனையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை..!

273

சட்டவிதிகளின்படியே வருமானவரிச் சோதனை நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாமீனில் வெளியே உள்ள சோனியாவும், ராகுல் காந்தியும் போபால் தொகுதியில் போட்டியிடும் பெண் சாமியார் பிரக்ஞா சிங்கை இழிவுபடுத்துவதா? தரக்குறைவாக விமர்சிப்பதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதுபோல, பெண் சாமியாரை எதிர்க்கட்சிகள் இழிவுபடுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, இந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கவே, பெண்சாமியாரை களமிறக்கியுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து, பேசிய பிரதமர் மோடி, சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார். இந்த சோதனைகள் அனைத்தும் சட்டவிதிகளின்படியே நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.