இயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..!

235

புனித வெள்ளியையொட்டி, இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைத்துப்பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் உள்ள கிறித்துவர்களால் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா கோவிலில், இன்று பாதிரியார்கள் சிலுவை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலம் மாதா கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவிலை சுற்றியபின் நிறைவடைந்தது. இந்த புனித வெள்ளி ஜெப ஊர்வலத்தில் ஏராளமான கிறித்துவர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

புனித வெள்ளி தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது டுவிட்டரில், இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை இன்று நினைத்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், மிகவும் தைரியமான மனப்பான்மை ஆகியவை மக்களுக்கு பெரிய வலுவூட்ட கூடியது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இயேசு கிறிஸ்துவின் அறிவுரைகள் இந்த உலகில் இருந்து அதர்மத்தையும், சமத்துவமின்மையையும் அகற்ற கூடியது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.