எளிய மக்களின் வலிகளை உணரும் திறன் காங்கிரசுக்கு இல்லை !

91

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் திருடர்களாகச் சித்தரிக்கும் காங்கிரஸ் கட்சி, அவர்களை அவமதிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள சோலாப்பூர் மாவட்டம் அக்லுஜ் என்னுமிடத்தில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை ஆற்றினார். அப்போது, காங்கிரஸ் கட்சி காவலனே கள்வன் எனக் கூறித் தன்னை இழிவுபடுத்துவதாகவும், இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவமதிக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வலிகளை உணரும் திறன் காங்கிரசுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். மகாராஷ்டிரத்தின் வறண்ட பகுதிகளைக் காங்கிரசும் தேசியவாதக் காங்கிரசும் பல பத்தாண்டுகளாகப் புறக்கணித்து வந்ததாகவும் மோடி குற்றஞ்சாட்டினார்.